fbpx
Homeபிற செய்திகள்கே.எம்.சி.ஹெச்.ல் 30-ம் தேதி வரை மார்பக பரிசோதனை முகாம்

கே.எம்.சி.ஹெச்.ல் 30-ம் தேதி வரை மார்பக பரிசோதனை முகாம்

கே.எம்.சி. ஹெச். மருத்துவமனையில், பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் இந்த மாதம் 30-ம்தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து கே.எம்.சி. ஹெச். மருத்துவமனை மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர் ரூபா கூறியதாவது: மார்பக புற்றுநோய் நகர்ப்புற பெண் களை அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் 2 பெண்களுக்கு ஒருவருக்கு முற்றிய நிலையில் தான் மார்பகபுற்று நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.

பொதுவாக எல்லா புற்று நோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பகங்களில் வலி, மார் பகத்தில் கட்டி (வலியுடன் அல்லது வலியில்லாமலும்), மார்பகக் காம்புகளில் கசிவு, மார்பகக் காம்புபின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் ஏதாவதொன்று இருந்தாலோ, இரத்த சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகலாம்.

இத்தகைய அறிகுறிகள் இல்லா விட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண் டும். ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டு பிடித்து விடலாம்.

இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனையாகும். கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீதகட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும்.

இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் போது முழுமையாக குணப்படுத்தி விடலாம். மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் அளவிற்கு நவீன சிகிச்சை முறை வந்துவிட்டது.

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் மருத்துவ குழுவினரை கொண்ட மார்பக பரிசோதனை மையம் ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது. இங்கு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் 30-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் ரூ.3000 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.1000 சலுகை கட்டணத்திலும்,ரூ.1000 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.450 சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img