fbpx
Homeபிற செய்திகள்‘அஜினோ மோட்டாவில் செயற்கைப் பொருட்கள் இல்லை’

‘அஜினோ மோட்டாவில் செயற்கைப் பொருட்கள் இல்லை’

அஜினோ மோட்டோவில் எவ்வித செயற்கையான செயல்பாடுகளோ, செயற்கை பொருட்களோ இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் அஜினோமோட்டோ குழுமத்தோடு இணைந்த ஒரு நிறுவனமான அஜினோ மோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், உயர்தர சீசனிங் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயா ரித்து வழங்கி வருகிறது.

2003-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம், தமி ழகத்தில் அமைந்திருக்கிறது. அஜினோ மோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இஷிகாவா-கட்சுயுகி கூறியதாவது:

கரும்பு அல்லது மரவள்ளிக் கிழங்கு போன்ற இயற்கை தாவர பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் உமாமிசீசனிங் கலவைப் பொருளாக, இயற்கையான நொதிப்பு செய்முறை வழியாக அஜினோ மோட்டோ தயாரிக்கப்படுகிறது.

அஜின மோட்டோவில் எவ்வித செயற்கையான செயல்பாடுகளோ, செயற்கை பொருட்களோ இல்லை. சுவையான உமாமி சுவையை இது தருகிறது. உமாமி என்பது ஐந்தாவது அடிப்படை சுவையாகும். இறைச்சி சார்ந்த சுவை என வர்ணிக்கப்படுகிறது.

வெங்காயம், காளான், பாலா டைக்கட்டி, சுரைக்காய் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இயற்கையாக கிடைக்கக் கூடிய குளூடாமிக் அமிலத்தின் இயற்கையான சுவையே உமாமி சுவை எனப்படுகிறது.

குளூடாமிக் அமிலம் என்பது வேறொன்றும் அல்ல சமைக்கும் பொருளின் சுவையை அதிகரிக்க பங்களிப்பு வழங்கும் அமினோ அமிலமே இது.
அஜினோமோட்டோவின் பாதுகாப்பு தன்மை, உலகளவில் புகழ்பெற்ற அனைத்து உணவு கட்டுப்பாடு ஒழுங்கு முறை அமைப் புகளாலும் திரும்பத் திரும்ப உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றார்,

அஜினோ மோட்டோ இந்தியா வின், சந்தையாக்கல் மேலாளர், கோவிந்த பிஸ்வாஸ், கூறியதாவது: நமதுவழக்கமான உணவுகளில் எம்எஸ்ஜி- (MSG) சேர்ப்பது, உப்பின் அளவை ஏறக்குறைய 37 சதம் வரை குறைக்க நமக்கு உதவும்.

ஏனெனில், வழக்கமான உப்போடு ஒப்பிடுகையில் அதன் சோடிய செறிவில் மூன்றில் ஒருபங்கே எம்எஸ்ஜி-யில் இருக்கின்றன. இந்திய நுகர்வோர்களுக்கு அஜினோ மோட்டோ எனப்படும் எம்எஸ்ஜி நிச்சயமாக ஆதாயமளிப்பதாக இருக்கும் என்றார்.

பிரபல உணவு முறை நிபு ணர் டாக்டர் தாரிணிகிருஷ்ணன் கூறுகையில்,
இயற்கை மூலப் பொருட்களில் இருந்து இது உற்பத்தி செய்யப்படுவதால் மோனோசோடியம் குளூட்டாமேட் மனிதர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img