தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் அலகின் மூலம் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் கிராமத்திலிருந்து மீட்கப்பட்ட பிறந்து 2 வாரங்களேயான பெண் குழந்தைக்கு மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, கயல்விழி என பெயர் சூட்டி, நல்லம்பள்ளி, கோவிலூரில் உள்ள குழந்தை நிர்மலா தத்து வள மையத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி ஒப்படைத்தார்.



