கோவை ராஜவீதி பகுதி யில் உள்ள கோயம் புத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் 83 ஆவது ஆண்டு மகாசபை கூட்டம் நேற்று இச்சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது, கடந்த 35 ஆண்டுகளாக இச்சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஆர்.எஸ்.கணேசனின் சேவையை பாராட்டி, சுந்தரராஜன் மற்றும் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் கேடயம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந் தித்த ஆர்எஸ் கணேசன் கூறியதாவது: இந்த கூட்டத்தின் வாயிலாக அரசுக்கு 8 தீர்மானங்கள் முன் வைத்து, அதனை அனைத்து நிர்வாகிகளின் முன்னிலையில், நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், தியாகி குமரன் மார்க்கெட் கடை வாடகைக்கு செலுத்தி வருகின்ற அபராத தொகையை ரத்து செய்ய வேண்டுமெனவும், தமிழக அரசாணை எண் 92/2007ன் படி வியாபாரிகளின் கடைகள், பெயர் மாற்றம் செய்ய அரசு வழிவகை செய்யவேண்டும், எனவும், தராசுகள் மற்றும் அளக்கும் உபகரணங்களுக்கு எலக்ட் ரானிக் உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதால், அதனை முத்திரையிடும் கால அளவை ஓர் ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்பது போன்ற எட்டு அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து உள்ளோம்.
மேலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு வியாபாரிகள் கோவை மாவட்டம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று வர நேரடியாக ரயில் சேவை தொடங் கப்படவில்லை. அரசு உடனடியாக இதனைக் கருத்தில் கொண்டு கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் சேவையை துவக்க முன்வரவேண்டும்.
இந்த ரயிலானது கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மற்றும் மதுரை மார்க்கமாக திருச் செந்தூர் சென்றடையும் வகையில் தமிழக அரசு ரயில் சேவையை துவங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து, அதனை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், பாரூக், அப்துல்ரகுமான் சேட், இச்சங்கத்தின் துணை செயலாளர் ரமேஷ், மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



