கோவை மாவட்ட ஆட் சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (செப்.30) நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.35.57 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 21 பயனாளிகளுக்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் வழங்கினார்.
பின்னர்அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:
முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, தேவையான ஆக்ஸிஜன் உற் பத்தி, படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகளையும், விரைவாக மேற்கொண்டதன் அடிப்படையில், தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளது.
அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று 180 என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது.
அனைத்து துறைகளிலும், பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்து வருகிறார். மருத் துவத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, சிறுநீரக டயாலிசிஸ் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கலைஞர் கருணாநிதி அறிவித்த திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தை, மறுபடியும் செயல்படுத்தும் வகையில், முதல்வர் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 1500 முகாம்களை நடத்தி அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன், மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு, கால்வாய்கள் சீரமைப்பு, மழையினால் பாதிக்கப்படும் பகுதிகளை கண் டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ,விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மை யத்தின் சார்பில் 4 பயனாளிக ளுக்கு ரூ.20.83 இலட்சம் மதிப்பிலும், மாற்றுத் திற னாளிகள் நலத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.2.88 லட்சம் மதிப்பிலும், மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1.45 இலட்சம் மதிப்பிலும், வேளாண்மைத் துறை யின் மூலம் 2 பயனாளிகளுக்குரூ.2.40 இலட்சம் மதிப்பிலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற 2 பயனாளிக்கு சிகிச் சைக்கான தொகை 8 லட்சம் மதிப்பிலும், 3 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு திட்ட அட்டைகள் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.35.57 இலட்சம் மதிப்பிலானஅரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா ளர் ராஜகோபால் சுன் கரா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த் ராம் குமார், மாவட்ட சமூகநல அலுவலர் தங்க மணி, மாவட்ட தொழில்மைய மேலாளர் (பொ) சண்முகசிவா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



