சட்ட விரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரியை காவல் துறை யினர் பறிமுதல் செய்து ஓட் டுனரை கைது செய்தனர். கோவை கணுவாய் பகுதியில் தடாகம் எஸ்ஐ ஜான் தலைமையிலான, காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட் டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற் கிடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது, சட்ட விரோதமாக செங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்துலாரியை பறிமுதல் செய்த தடாகம் காவல் துறையினர், ஓட்டுனரை கைது செய்தனர். ஓட்டுனரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.



