fbpx
Homeபிற செய்திகள்கோவை மேற்குமண்டலப் பணிகள் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மேற்குமண்டலப் பணிகள் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்குமண்டலத்தில், கொரோனா தடுப்புப் பணி களை மேற் கொள்ளும் முன்களப் பணியாளர்களின் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேற்று(செப்.29) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.8-க்கு உட்பட்ட கவுண் டம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார் ஆணையாளர்.

முன்களப் பணியா ளர்கள் வீடுவீடாகச் சென்று சளி,காய்ச்சல், இரு மல் போன்ற அறிகுறி உள்ள வர்களைக் கண்ட றியும் போது, வீட்டில் உள்ள அனைவரையும் பரிசோ தனை செய்ய வேண்டும்.

பரிசோதனையின் விபரங்களை கோவிட்-19 களஆய்வுப் பதிவேடுகளில் பதிவு செய்திடவேண்டும். தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்யவேண்டும்.

களப்பணி மேற்கொள்ளும் போது முகக்கவசம் அணிந் தும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கொசுவினால் ஏற்படும் டெங்கு போன்ற நோய்களை தடுப்பதற்காக பொதுமக்களிடம் வீடுகளில் உபயோகமற்ற பொருட்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கொசுக்கள் புகா வண்ணம் மூடி வைக்க வேண் டும் என்பது பற்றிய விழிப்பு ணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

வார்டு எண். 5-க்கு உட்பட்ட கவுண்டம் பாளையம், சேரன்நகர் பகுதியில் 6 இலட்சம் கொள் ளளவு கொண்ட நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகப்படும் குடிநீர்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வார்டு எண்.8, இந்திராநகர் பகுதியில் மழைநீர் வடிகால் கால் வாயில் தூர்வாரும் பணி கள் நடைபெற்று வரு வதை பார்வையிட்டார்.

தூய்மைப் பணியாளர் களிடம் வடிகால் கால் வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, சீராக நீர் செல்லும் வகையில் தூய் மைப்படுத்த வேண்டும் என தூய்மைப்பணியாளர்களிடம் தெரிவித்தார்.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கிருஷ்ணம்பதி குளத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இப்ப ணிகளை விரைந்து முடிக் குமாறு அலுவ லர்களுக்கு உத்தர விட்டார்.

21-வது வார்டுக்கு உட்பட்ட பனைமரத்தூர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் புதியதாக வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொ ண்டார்.
பூசாரிபாளையம் பகுதியில் உள்ள முதி யோர் இல்லத்தை மாநக ராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார்.

ஆய்வின் போது, மேற்குமண்டல உதவி ஆணையாளர் சிவசுப்பி ரமணியம், உதவி செயற் பொறியாளர் ஹேம லதா, உதவிபொறியாளர் ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img