fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியின் வழி காட்டுதலின்படி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கள் நடந்தன.

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், நேற்று (செப்.26) காலை 10 மணி முதல் 11 மணி வரையும் பழையபேட்டை காந்தி சிலை அருகில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இளம் வயது திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள், கல்வியின் அவசியம் மற்றும் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது வந்தோர் கல்வி ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு ஆடல், பாடல், கதைகள் மற்றும் தப்பாட்டம் மூலம் சமுதாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கிருஷ்ணகிரி புதுக்குரல் கலைக்குழு நடத்திய கலை நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர் மரியரோஸ், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img