fbpx
Homeபிற செய்திகள்தெற்கு மண்டல தூய்மை, வளர்ச்சிப் பணி கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தெற்கு மண்டல தூய்மை, வளர்ச்சிப் பணி கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதி களில் தூய்மைப் பணியா ளர்கள் மேற் கொள்ளும் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தெற்கு மண்டலம் வார்டு எண்.100-க்கு உட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் உள்ள சுகா தார ஆய்வாளர் அலு வலகத்தில் ஆய்வு மேற் கொண்ட ஆணையர், அங்கு தூய்மைப் பணியா ளர்களின் வருகைப் பதிவே டுகளை ஆய்வு செய்தார்.

வீடு தோறும் குப்பையை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றி நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திடவேண்டும்.

தூய்மைப் பணியா ளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும்.

அனைவரும் முகக் கவசம் அணிந்து பணி யாற்ற வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் போட் டுக்கொள்ள வேண்டும் என அறிவு ரைகள் வழங்கினார்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் திற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

செட்டிபாளையம் முதல் ஈச்சனாரி பிரிவு ரயில்வே கேட் அருகில் பாதாள சாக்கடை பணி களுக்காக இணைப் புக்கு ழாய்கள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருவதையும் பார் வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

ஆய்வின் போது, செயற் பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் சுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img