fbpx
Homeபிற செய்திகள்‘40 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்க்கை சக்கரத்தை இயக்குகிறது ராம்ராஜ் நிறுவனம்’

‘40 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்க்கை சக்கரத்தை இயக்குகிறது ராம்ராஜ் நிறுவனம்’

40 ஆயிரம் நெசவாளர் குடும் பங் களின் வாழ்க்கை சக்கரத்தை ராம் ராஜ் காட்டன் நிறுவனம் இயக்கி வருகிறது என்று அதன் நிறுவன உரி மையாளர் நாகராஜன் தெரி வித்தார்.

மதுரையில் கடந்த 100 ஆண்டு களுக்கு முன், வேட்டியை மட்டுமே தனது உடையாக்கிக் கொண்டார் மகாத்மா காந்தி. இந்நாளை நூற்றாண்டு விழாவாக, ராம்ராஜ் நிறு வனம் சார்பில் விமரிசையாக கொண் டாடப்பட்டது.

மகாத்மா காந்தியை கொண்டாடுவோம் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மகாத்மா காந்தி 1921-ம் ஆண்டு மதுரைக்கு வந்தார்.

அப்போது மேலாடை அணிய வசதி இல்லாத ஏழை, எளிய மக்களைக் கண்டார். அடிப்படை வசதியான உடை உடுத்த முடியாத மக்கள், இந்தியா முழுவதும் உள்ள நிலையில் வசதி வாய்ப்பை கொண்ட தான் மட்டும் முழு ஆடை அணி வதா என தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டார்.

அனை வருக் கும் போதுமான சுதேசி ஆடை இல்லாததால், வேட்டியை மட்டும் உடுத்தி அரை ஆடை மனிதனாக வாழ்கிறேன் என முடிவு எடுத்தார்.

மதுரையில் நடந்த கூட்டத்தில் அரை வேட்டி மட்டும் அணிந்து கலந்து கொண்டார். எளிய மக்களின் பிரதிநிதியாக, ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடிய மகாத்மா, சுதேசி ஆடையான வேட்டி அணி வதன் மூலம் நெசவாளர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்த முடியும் எனஉறுதியாக நம்பினார்.

அதன்படி மகாத்மா காந்தி அரை ஆடை வேட்டி மட்டும் அணியத் துவங்கிய செப்டம்பர் 22-ம்தேதி, காந்திய வேட்டி நூற்றாண்டு விழாவாக ராம் ராஜ் நிறுவனம் சார்பில் திருப்பூரில் நடைபெற்றது.

இந்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. அவற்றை பாதுகாக்க 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

மூன்று நலிவடைந்த நெசவா ளர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய்க் கான காசோலையை ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் வழங்கினார்.

மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற புத்தகத்தை பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட்டார். 100 சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் மற்றும் 100 நெசவாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதில், ராம்ராஜ் காட்டன் நிறுவன உரிமையாளர் நாகராஜன் பேசியதாவது:
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி சிறப்பாக சென்ற சமயத்தில், வேட்டி உற்பத்தி செய்யப் போகிறேன் என்ற போது, பலர் வேண்டாம் என்றார்கள்.

ஆனால் ,இன்று மகாத்மா காந்தி வழியில் 40 ஆண்டுகளாக வேட்டி தயாரிப்பின் மூலம், உலகின் பல்வேறு நாடுகளில்எங்கள்கிளையை நிறுவி உள்ளோம்.

ராம்ராஜ் நிறுவனம் 40 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்க்கை சக்கரத்தை இயக்கி வருகிறது. 40 ஆண்டுகளாக வேட்டியை இந்தியாவின் அடையாளமாக மாற்றி உள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img