உதகமண்டலம் நகராட்சி பகுதிகளில் உள்ள 36 வார்டு களையும், 6 மண்டலங்களாக பிரித்து, தூய்மைப் பணி முகாம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் குருசடி பகுதியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று (செப்.20) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார்
பின்னர் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களி டம் தெரிவித்ததாவது: மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபோது, கொரோனா பெருந்தொற்று நோயின் தாக் கம் அதிகமாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இரவு, பகல் பாராமல் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு, கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாக இன்று இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொது மக்களின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதை எண்ணி, நியாயவிலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை அறிவித்து, அதை அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்த உத்தரவிட்டார்.
முதல்வராக பொறுப் பேற்றபோது, ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற திட்டத்தில் கையெழுத் திட்டு செயல்படுத்த உத்தரவிட்டார்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பாக பல திட்டங்களை அறிவித்து மிகச் சிறப்பாக செயல்படுத்தி, மக்கள் பாராட்டும் வகையில் முதல்வர் தலைமையிலான தமிழக அரசு செயல் பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவ மழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிகமாக தேக்கமாகும் மழை நீரினால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை ஏற்படும். மழை நீர் சாக்கடையுடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் ஆக அறிவித்து, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில், நகரில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த, பணிகளை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில், இன்றைய தினம் முதற்கட்டமாக அதிகமாக மழை நீர் தேங்கும் பகுதியான காந்தல், முக்கோணம், குருசடி காலனி பகுதிகளில் இத்தூய்மைப் பணி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
உதகமண்டலம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகளில் கால்வாய்கள் (Major Drains) 3 கி.மீ. சிறிய கால் வாய்கள் (Minor drains) 6.885 கி.மீ. மற்றும் சிறுபாலங்கள் (Culverts) 40 எண்ணிக்கைகள் உள்ளன.
எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையின் போது, பெய்யும் கன மழையின் காரணமாக நகர்ப் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்காமல் இருக்க, நகராட்சி பகுதிகளில் உள்ள மேற்கண்ட மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப் பணிகள் மேற்கொள்ள, இந்நகராட்சி பகுதிகளில் உள்ள 36 வார்டுகளையும், 6மண்டலங்களாக பிரித்து, தூய்மைப் பணி முகாம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெரிய மழை நீர் வடிகால்களில் சேகரமாகி உள்ள வடிகால் படிவுகளை அகற்ற பொக்லைன் இயந்திரம் போன்றவை கொண்டு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
நடுத்தர மற்றும் சிறிய மழை நீர் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.
வடிகால்களில் படிவுகளை அகற்றும்போது, ஆரம்ப பகுதியில் இருந்து தொடங்கி, வடிகால் இறுதி பகுதி வரை எவ்வித விடுதலின்றி பணியினை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
உதகை சார்ஆட்சியர் டாக்டர் மோனிகாரானா, உதகை நகராட்சி ஆணைய £ளர் சரஸ்வதி, உதகை நகராட்சி பொறியாளர் இளங்கோவன், உதகை வட்டாட்சியர் தி னேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



