fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் மனைவி நலவேட்பு நாள் விழா

கிருஷ்ணகிரியில் மனைவி நலவேட்பு நாள் விழா

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை துளுக் காணி மாரியம்மன் கோவி லில், மன வளக்கலை மன்றஅறக்கட்டளை சார்பில், வேதாத் திரிய பயிலகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து மனைவி நல வேட்பு விழாவினை நடத்தியது.

விழாவில், பேராசிரியர் பங்காரு பேசியதாவது:
உலகம் முழுவதும் தந்தை நாள், அன்னை நாள், கணவன் நாள், குழந்தைகள் நாள் கொண் டாடப்படுகின்றன.

மனைவியின் சிறப்பைப் போற்றும் விதத்தில், மனைவி நாள் என்று யாரும் கொண்டாடுவது இல்லை. சமூகத்தில் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வை போக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ம¬ னவி நல வேட்பு நாள் கொண்டாடப்படுகிறது.

இல்லறத்தில் ஆன் மிக வாழ்வு என்பது தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் ஆகிய உறவுகளின் மீது அன்பு செலுத்துவதாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடம் அன்பில் குறைபாடு ஏற்படும் போது சிரித்துப் பேசி பழகினால் இருவரிடமும் அன்பு பெரு கும் என்றார்.

விழாவில், 20-க்கும் மேற்பட்ட தம்பதியினர் அருட்காப்பு, காந்த அலை பரிமாற்றம், சங்கல்பம் செய்து கொண்டனர்.

ம¬ னவிகளின் வலது கை மீது, கணவர்கள் கையைவைத்து, வாழ்த்துகளைத் தெரிவித்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து கனி மற்றும் ரோஜாப் பூக்களை பரிமாறி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்

படிக்க வேண்டும்

spot_img