கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கை: மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’ வருகின்ற 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங் கன்வாடி மையங்கள், சத்துணவு மை யங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40,000 மையங்களில் நடைபெற உள்ளது.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது
இந்த சிறப்பு ‘மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’ தொடர்பாக , கோவை மாநகர் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் , வட்டக்கழகப் பொறு ப்பாளர்கள் , மாவட்ட அணிகளின் அமைப் பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் தங்களது பகுதிக் குட்பட்ட வட்டக்கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசி , பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி , மூன்றாவது அலையை தவிர்ப்பதற்காகவும் , கொரோனா நோயிலிருந்து விடு படவும், கோவிட் வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறவும் அனைத்து மக்களும் இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெறுவதற்கு உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



