fbpx
Homeபிற செய்திகள்தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு

தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு

தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகப்படுத்தும் நோக்கில், அடுத்தகட்ட நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடையவர்களுக்கு வரும் 12ம் தேதி மாபெரும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் கூடுதல் தலைமை செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர், காவல் துறை தலைமை இயக்குநர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அலுவலர், பொதுத்துறை செயலாளர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img