தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:
“1. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்துவரும் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலாளராக பதவி வகித்துவரும் டி.பாஸ்கர பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்” இவ் வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



