Homeபிற செய்திகள்தர்மபுரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர்  சோதனை

தர்மபுரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர்  சோதனை

தர்மபுரி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை யினர் திடீர் சோதனை நடத்தி, விதிமீறல்களுக்கு அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி, உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக் டர் ஏ.பானுசுஜாதா தலை மையில் இச்சோதனை நடந்தது.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலு வலர் கே.நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலம் பைபாஸ், மொரப்பூர் மெயின் ரோடு, பஸ் நிலையம் மற்றும் தர்மபுரி மெயின் ரோடு பகுதிகளில் உள்ள பேக் கரிகள், மொத்த விற்பனை நிலையங்கள், மளிகைக் கடைகள், பெட்டி கடைகள், பீடா கடைகள், பலகார கடைகள், குளிர்பான நிலை யங்கள், பழக்கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற மூன்று கடைகளுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.15000-மும் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் உபயோகம், விற்பனை மற்றும் உணவு பாதுகாப்பு விதி முறைகள் பின்பற்றாத பொட்டலம் இடப்பட்ட தின்பண்டங்கள், காலாவதி பொருள்கள் விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு ரூ.2000,1000 என ஒரே நாளில் மொத்தம் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

முகக்கவசம் அணியாத விற்பனையாளர் 5 பேருக்கு தலா 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வில் காலாவதியான பொருள்கள், உரிய லேபில் நடைமுறை பின் பற்றாத பாக்கெட்கள், தரமற்ற இனிப்புகள், தின்பண்டங்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், நெகிழிகள் என ரூ.5000 மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டன.

அனைவருக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் தரப்பட்டது.
முன்னதாக காரி மங்கலம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற அனைத்து வணிகர் சங்கம், வட்டார மருத்துவமனை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக வணிகர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு, தடுப்பூசி முகாம் நடை பெற்றது.

வணிகர் சங்கத் தலைவர் மாது முன்னிலையில் மாவட்ட நியமன அலுவலர் ஏ.பானுசுஜாதா, உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சிறப்புரையாற்றினர்.

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தடுப்பு மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதிமொழி ஏற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img