fbpx
Homeபிற செய்திகள்கோவை பட்டணம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த நபரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு

கோவை பட்டணம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த நபரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் – பரபரப்பு

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த, பட்டணம் பகுதியில் வசித்து வருகின்ற திருக்குமரன் நகர், விஐபி நகர், ஸ்ரீனிவாசா நகர் என மூன்று குடியிருப்புகளை இணைத்து டிவிஎஸ் குடியிருப் போர் நலச்சங்கம் என்ற பெயரில், சுமார் 250 க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர்.

இவர்களின் குடியிருப்புகளுக்கு செல்லும் முக்கிய வழித் தடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கி ரமிப்பு செய்ததோடு மட்டுமின்றி, இந்த பகுதிகளுக்கு செல்லும் பாதையை நேற்று இரவில் மது போதையில், தடுப்புகளை வைத்து அடைத்ததாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இந்த பகுதி மக்கள் இது குறித்து அந்த நபரிடம், நேற்று இரவு கேள்வி எழுப்பிய பொழுது இருதரப்பி னருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இன்று காலை பட்டணம் பகுதியில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், மற்றும் காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் அந்தப் பகுதியின் ஆர்ஐ, மற்றும் கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக அந்த பகுதிக்கு வரவழைத்து அந்த பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கத்திற்கு செல்லும் வழி எவ்வளவு தூரம், உள்ளது, தனிநபர் பொது இடத்தை எவ்வளவு ஆக்கிர மிப்பு செய்துள்ளார் என அளக்கபட்டது.

இதன் அடிப்படையில் தனிநபர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது, காவல்துறையினர் இதுகுறித்து டிவிஎஸ் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளிடம் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்தது உண்மை என்று அறிக்கையில் வெளிவந்துள்ளது.

ஆனால், இது சிவில் வழக்கு இதில் காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ள முடியாது, எனவே பொதுமக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து பட்ட ணம் சாலையில் டிவிஎஸ் குடியிருப் போர் நலச்சங்க நிர்வாகிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், இன்று பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்த ஆர்ப்பாட்டத்தில், டிவிஎஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் தங்கராஜ், செயலாளர் அன்பழகன், பொரு ளாளர் சீனிவாசன், மற்றும் குடியி ருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சிரீல் வினோத், மோகன்ராஜ், கார்த்திகேயன், ஜெபஸ்டின் , வினோத் குமார், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img