திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 135 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், தண்ணீர் படுக்கைகள் மற்றும் காற்றுபடுக்கைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.
உடன் தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவன தலைவர் ரமேஷ் மற்றும் பலர் உள்ளனர்.



