தனியார் மருத்துவ மனைகளில் தனியார் நிறு வனங்களுக்கான சி.எஸ்.ஆர். நிதியை கொண்டு தமிழகத்தில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அண்மையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவை கே.எம்சி.ஹெச். சார்பாக இலவச கொரோனா தடுப் பூசி திட்டத்தின் கீழ், கோவைநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொ துமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மூன்றாம் கட்டமாக நேற்று (ஆக.24) அன்று சித்ரா- காளப்பட்டி சா¬ லயில் உள்ள டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் பொதுமக்கள் 1000 பேருக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது.
இதில் கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை நிர்வாக அதி காரி கார்த்திகேயன், டாக் டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி. புவனேஷ்வர் மற் றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரியின் கம்யூனிட்டி மெடிசின் பேராசிரியர் டாக்டர் ஜீவிதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



