fbpx
Homeபிற செய்திகள்ஓணம்: கோவையில் அத்திப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்

ஓணம்: கோவையில் அத்திப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்

ஒணம் பண்டிகையை முன்னிட்டு கோவை யில் உள்ள சித்தப்புதூர் ஐயப்பன் கோவிலில் மலையாள மொழி பேசும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆண்டு தோறும் அஸ்தம் நாளில் தொடங்கும் ஓணம் பண்டிகையின் போது மலையாள மொழி பேசும் மக்கள் மகாபலி மன்னர் தங்களை சந்திக்க வருவார் என்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர்.

அவரை வரவேற்க வழிபாடு நடத்தி, அத்திப்பூ கோலமிட்டு, நடனமாடியும் கொண்டாடுவர்.

அந்த வகையில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
கோவை மாவட்டம் கேரள மாநிலத்திற்கு அருகில் இருப்பதால் இங்கு மலையாள மொழி பேசும் கேரள மக்கள் ஏராளமா னோர் உள்ளனர்.

அவர்கள் கோவையிலேயே தங்களது ஓணம் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று தங்கள் வீடுகளில் பூக்கோலமிட்டு வழிபாடு நடத்தியதோடு, சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொ ண்டனர்.

இதற்காக ஐயப்பன் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா காலம் என்பதால் கோவிலுக்கு வரும் பக் தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரும் படியும், சமூக இடைஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டனர்.

மேலும், பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக் கப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img