கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் உலக உடல் உறுப்புதானம் தினத்தை யொட்டி “ லைப் ஆப்டர் லைப்” வாழ்க்கை க்கு பிறகு வாழ்க்கை என்ற தலைப்பில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (13-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
விழாவுக்கு கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
விழாவில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் சமீரன் சிறப்பு அழைப்ப £ளராக கலந்து கொண்டு உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் குடும் பத்தினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விழாவில் அவர் பேசும் போது கூறியதாவது:-
உடல் உறுப்பு தானம் என்பது தியாக உணர்வு.
அது விலைமதிப்பற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தது கோவிலுக்கு வந்ததுபோல் உணர்கிறேன், கே.எம்.சி.எச். மருத்துவமனையில் 3 ஆயிரம் கிட்னி, 115 லிவர், 15 முதல் 20 இருதயம் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்ததன் காரணமாக மருத்துவமேம்பாட்டில் கோவை கே.எம்.சி.எச். முக்கிய பங்கு வசிக்கிறது. மேற்கண்டவாறு அவர் கூறினார்.
விழாவில் கோவை மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, சுகாதாரத் துறை இணை இயக்குனர் சந்திரா, கோவை கே.எம்.சி.எச். குமரன், பொதுமேலாளர் நாராயணன், கலெக்ட்ரேட் பி.ஆர்.ஓ.செந்தில் அண்ணா, கே.எம்.சி.எச்.மருத்துவமனை பி. ஆர்.ஒ.சசி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்



