fbpx
Homeபிற செய்திகள்அன்லிமிடெட் 4 ஜி டேட்டா வி ‘ரெட்எக்ஸ் பேமிலி பிளான்’ அறிமுகம்

அன்லிமிடெட் 4 ஜி டேட்டா வி ‘ரெட்எக்ஸ் பேமிலி பிளான்’ அறிமுகம்

வி, தனது முதன்மை திட்டமான ரெட்எக்ஸ் -ஐ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பயன் படுத்தும் வகையில், தனித்துவமான போஸ்ட்பெய்ட் அனுபவத்தை அளிக்கும் ரெட்எக்ஸ் பேமிலி பிளானை விரிவுபடுத்தி இருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் குடும்பங்கள், தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்கவும் தங்கு தடையில்லாத, சீரான மொபைல்ஃபோன் அனுபவத்தையே சார்ந்திருக்கின்றன.

குடும்ப உறுப்பினர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா, பொழுது போக்கு மற்றும் பயணம் உள்ளிட்ட இன்னும் பல சிறப்பு பலன்களை ஒரே யொரு பில் மூலம் இனி பெறமுடியும்.

ரூ.1699 மற்றும் ரூ. 2299 கட்டணத்தில், வி ரெட்எக்ஸ் பேமிலி பிளான் மூலம் வாடிக்கையாளர்கள் முறையே 3 மற்றும் 5 குடும்ப உறுப்பினர்களை இத்திட்டத்தில் இணைக்க முடியும்.

ஒவ்வொரு இணைப்பிலும் அன் லிமிடெட் 4ஜி டேட் டாவுடன் கூடிய வி ரெட் எக்ஸ்பேமிலி பிளான் திட்டமானது, பொழுது போக்கு, பய ணம் தொடர்பான பல அட்டகாசமான நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

பிரைமரி மெம்பர் எனப்படும் இத்திட்டத்தின் முதன்மை உறுப்பினர் ஒடிடி தளங்களான நெட் ஃப்ளிக்ஸ், அமேஸான் ப்ரைம், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விமூவிஸ் அண்டு டிவி பார்த்து ரசிக்க உதவும் விஐபி ஆக்சஸ் உள்ளிட்ட பிரத்யேக பொழுதுபோக்கு பலன்களைப் பெற முடியும்.

இவற்றுடன், 7 நாட்கள் பயன்படுத்தக்கூடிய, 2999 ரூபாய் மதிப்புள்ள இலவச சலுகையிலான இண்டர்நேஷனல் ரோமிங் பேக்கேஜ்ஜையும் இத்திட்டம் வாடிக் கையாளர்களுக்கு வழங்குகிறது.

வி நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அவ்னீஷ் கோஷ் லா கூறியதாவது: இந்த திட்டம் உண்மையிலேயே மற்றவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, வித்தியாசமான திட்டமாகும்.

இதன் அறிமுகம், போஸ்ட் பெய்ட் சேவையை மேலும் வலுவுள்ளதாக்குகிறது. இந்த திட்டம் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மலிவான கட்டணத்தில் அதிக பயன்களை அளி க்க கூடியதாகவும், மேம்பட்ட பல்வேறு சௌகரியங்களை வழங்கும் ஒன்றாகவும், பிரத்யேகமாகவும் வடி வமைக்கப்பட்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img