fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

கோவையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

கோவை மாவட்டம், சூலூர், கிட்டாம் பாளை யத்தில் உள்ள அலுமினிய இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கூடம், ஆர்.எஸ்.புரம் மெக்ரிக்கர் சாலையில் தமிழ் நாடு குடிசைப் பகுதிமாற்று வாரியம் மூலம் ரூ.7.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு, செல்வபுரம் IUDP காலனியில் ரூ..46. 44 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் நேற்று (ஆக.12) ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டு மல்லாமல் அனைத்து பிரிவுமக்களுக்கும், தரமான இயலக்கூடிய அளவிலான விலையில், குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்து, ஏற்றத் தாழ்வற்ற வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து பிரிவு மக்களுக்கும் வழங்க ப்பட்டு வருகின்றன.

கோவை ஆர்.எஸ்.புரம், மெக்ரிக்கர் சாலையில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 85 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் ரூ.7.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடியி ருப்பும், வசிப்பறை, சமை யலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப் பறை போன்ற வசதிகளும் 400 சதுர அடிபரப்பளவில் அமைக் கப்பட்டுள்ளது.
காற்றோட்ட வசதி 2 ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் ஒரு கீழ்நிலைத் தண்ணீர் தொட்டிகளுடன் கூடிய தண்ணீர் வசதி மற்றும் கழிவுநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு, பேவர்பிளாக் நடைபாதை, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குடியிருப்புகள் இதே இடத்தில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்த மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள வீடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழை களின் குடும்ப ங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் ரூ.9.38 இலட்சம் ஆகும். இதில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியம் போக மீதமுள்ள ரூ.1,88,000-யை பயனாளிகள் செலுத்த வேண்டும்.

குலுக்கல் முறையில் அடுக்குமாடி குடியிருப் புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
செல்வபுரம் IUDP காலனியில் சிதலமடைந்த பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றி விட்டு ரூ.46.44 கோடி மதிப்பில் 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கு வசித்து வந்த பயனாளிகள் அதே இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர் த்தப்பட உள்ளனர். மீதமுள்ள வீடுகள் பொருளா தாரத்தில் நலிவுற்ற நகர்ப் புற ஏழைகளின் குடும் பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

ஒவ்வொரு வீட்டின் மதிப்பு ரூ.8.80 இலட்சம் ஆகும். இதில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியம் போக மீதமுள்ள ரூ.1,30,000-யை பயனாளிகள் செலுத்த வேண்டும்.

குலுக்கல் முறை யில் அடுக்கு மாடி குடியிருப்புகள் ஒதுக் கீடு செய்யப்பட உள்ளது.
ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தினை உறுதி செய்யும் வகையிலும் அனைத்து தரப்பு மக்களுக்கான வீட்டு வசதித் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.

இவ்வாறு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரி வித்தார்.

ஆய்வின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண்ராய், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண் இயக்குநர் இளம்பகவத், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைமைப் பொறியாளர் மோகன், கண்காணிப்பு பொறியாளர் நஞ்சப்பன், செயற்பொறியாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img