ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் காரை அறிமுகம் செய்துள்ளது.
சமீபத்திய தொழில் நுட்பமான 2.9 லிட்டர் இரட்டை டர்போ வி6 டிஎப்எஸ்ஐ என்ஜினுடன் 450 குதிரை சக்தி திறனுடன் 600 என்எம் முறுக்கு விசையுடன் வெளிவந்துள்ள இந்த புதிய ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக், அற்பு தமான செயல் பாட்டுடன் அற்புதமான செயல்திறனை வழங்குகிறது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 1.04 கோடி ரூபாய். அறிமுக விலையாக இந்த விலையை ஆடி நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பிர் சிங் தில்லான் கூறியதாவது: இந்தியாவிற்கு முதன் முறையாக ஆடி ஆர்எஸ் 5 ஒரு ஸ்போர்ட்பேக் காராக வந்துள்ளது.
இந்த கார் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ப, கூடுதல் வசதிகளைக் கொண் டுள்ளது. ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் ஒரு மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் கார் ஆகும். கம்பீரமான தோற் றத்தில் சிறந்த செயல்திறனுடன் வெளிவந்துள்ள இந்த கார் சொகுசு கார்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இந்திய வாடிக் கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும்.
அதன் அழகான தோற்றம், ஸ்போர்ட்டி டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் பவர் பேக் செய்யப்பட்ட இன்ஜின் ஆகியவற்றுடன் வெளிவந்திருக்கும் இந்த கார் 3.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ. வேகம் செல்லும் திறன் கொண்டது.
இதன் உச்சபட்ச வேகம் 250 கி.மீ. ஆகும். எங்களின் அனைத்து ஸ்போர்ட் மாடல் கார் களுக்கும், நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதை பார்த்து வருகிறோம்.
ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக்கின் வருகையானது, இது போன்ற கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் என்று நம்புகிறோம்.
எங்களது நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படும் 5-வது மாடல் கார் இது.
எங்களது பயணம் மேலும் தொடரும். இன்னும் பல புதிய மாடல் கார்கள் எங்கள் பிராண்டில் இருந்து வெளிவரும் என்றார் அவர்.



