fbpx
Homeபிற செய்திகள்நாகர்கோவிலில் குழாய் மூலம் உரம் தயாரிக்கும் திட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

நாகர்கோவிலில் குழாய் மூலம் உரம் தயாரிக்கும் திட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி அருகிலுள்ள ஹோலி கிராஸ்நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத் தின் கீழ்குழாய் மூலம் உரம் தயாரிக்கும் திட்டத்தினை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று (ஆக.10)தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர் களிடம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கூறிய தாவது:
கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ளவீடுகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிவு பொருட்களை மாநக ராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பை, மக்கா குப்பை மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரிக்கப்படுகின்றன.

இதில் மக்கும் குப்பையை நுண் உரசெய லாக்க மையங்களில் உரமாக்கி அவற்றை தேவைப்படும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கழிவுப் பொருட்களை பொது வெளிகளில் கொட்டாமல், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு கன்னியாகுமரி மாவட் டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத் தின்கீழ், பொதுமக்களின் முழுபங்களிப்புடன், வீடுகளில் இருந்து பெறப்படும் மக்கும் குப்பையை வீட்டிலேயே உரமாக்கும் புதிய முயற்சியினை நாகர்கோவில் மாநகராட்சி முன்னெடுத்தது.

அதன் அடிப்படையில் இத்திட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரி அருகாமையில் உள்ள ஹோலி கிராஸ் நகரில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை விரிவுப்படுத்தும் நோக்கில், தன்னார்வலர்களின் முழு பங்களிப்புடன் 1000 பைப்புகள் உரமாக்கும் பணிக்கு பெறப்பட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 115 வீடுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குழாய் மூலம் உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழாய்மூலம் உரம் தயாரிப்பதற்கு 1-1/4 அடி உயரம் மற்றும் 8 இன்ச்விட்டம் உள்ள இரண்டு பைப்புகளை 30 சதவீதம் அளவிற்கு மண்ணிற்கு அடியில் புகுத் திவைத்து, தினந்தோறும் வீட்டிலிருந்துவரும் மக்கும் குப்பையை அதற்குள்« பாட்டு, வாரம் ஒருமுறை சர்க்கரைகரைசல் அல்லது தயிர் ஊற்றி 30 நாட்கள் சேகரித்துவைக்க வேண்டும்.

அதன் பின்பு, அடுத்த 30 நாட்கள் மூடிவைத்துவிட வேண்டும். இரண்டாவது பைப்பிற்கும் இதே நடைமுறையை பின்பற் றுவதன் மூலம் வீட்டிலேயே மக்கும் குப்பையை உரமாக மாற்றுவதோடு, பொது மக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் ஒத்துழைப்போடு, அவர் களை வைத்தே கழிவுப் பொருட்களின் மூலம் உரம் தயாரிக்கிற ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

இம்முயற்சியை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல் படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இந்த முயற்சி வெற்றி பெறுகிற நேரத்தில், திடக்கழிவு மேலாண்மையில் ஒருபுதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்குழாய்கள் அமைப் பதற்கான செலவு மிகவும் குறைவு. பொதுமக்களும் இத்திட் டத்தினை முழுமையாக செயல்படுத்துவதற்கு தயாராக உள்ளோம் என்று தெரிவித் துள்ளார்கள்.

குழாய் அமைக்க இயலா தவர்களுக்கு, தன்னார் வலர்கள் மற்றும் அமைப்புகளின் வாயிலாக குழாய் அமைப் பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, திடக்கழிவு மேலாண் மையில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை தந்து, உங்கள் பகுதிகளை மாசில்லா பகுதிகளாக மாற்றிட மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் த.மனோதங்கராஜ் கூறினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித், முன்னிலை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு. கிங்சால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ,வழக்கறி ஞர்கள் மகேஷ், சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img