fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0

நலமான பாரதம், வளமான பாரதம் என்ற குறிக்கோளுடன் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை யினரால் தொடங்கப்பட்ட, ஆரோக்கிய இந்தியா ஓட்டம், கோவையில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது.

இந்நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஓட் டத்தினை, கேபிஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில், கல்லூரி முதன்மைச் செயலர் முனைவர் ஏ.எம்.நடராஜன் முன்னிலையில், முதல்வர் முனைவர் மு.அகிலா மற்றும் முனைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தனர்.

கல்லூரி நிர்வாகப் பிரிவில் தொடங்கிய இந்த ஓட்டம் பல்வேறு பாதைகளைக் கடந்து, முதன்மை வாயிலை அடைந்து, மீண்டும் கல்லூரி கலையரங்கத்தில் நிறைவுபெற்றது.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடந்த இந்த ஓட்டத்தின் முடிவில் வேதியியல் துறையைச் சேர்ந்த முனைவர் திரிவேணி ராஜசேகர், முனைவர் சூர்யகாந்த் ஆகியோர் உடல் ஆரோக்கியம் என்ற தலைப்பில் பேசினர்.

ஏற்பாடுகளை உடற்கல்வித் துறையைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குநர் முத்துலட்சுமி, ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img