நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் எருமபட்டியில், இலங்கை அகதிகள் முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் நேற்று முன்தினம் (ஆக.7) ஆய்வு மேற்கொண்டார்.
இலங்கை அகதிகள் முகாமில், முகாம் வாழ் மக்கள் வழங்கிய குடிநீர் இணைப்பு கோருதல், சாலை வசதி, சமுதாய கூடம் கட்டித்தர கோருதல் புதியதாக மின் இணைப்பு கோருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், கொரோனா சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நோய் த்தொற்று தடுப்பூசி செலுத்தப் பட்டது.
நிகழ்ச்சியில், சேந்த மங்கலம் வட்டாட்சியர் சுரேஷ், எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர் மருத்துவ அலுவலர்கள் செயல் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



