ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் செவிலியர் கல்லூரி இணைந்து தாய்ப்பால் வாரத்தை கொண்டாடியது.
இந்த வருட உலக தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்து, தாய்ப்பால், ஊட்டுதலின் முக்கியத்துவம் மற்றும் குடும்பத்தின் பங்களிப்பு. அதையொட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலி யர் கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவியர்கள் நாடகம், சைகை நாடகம் மற்றும் சுவரொட்டிகள் மூலமும் சித்திரங்கள் வரைந் தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மருத்துவமனை செவிலியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மகப்பேறு மருத்துவத் துறை தலைவர் டாக்டர் பானுமதி, தலைமை தாங்கி பேசுகையில், தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
குழந்தை நல மருத்துவர் சுஜாமரியம், எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்க வேண்டும். அதற்கு மருத்துவ ர்கள் மற்றும் செவிலியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கல்லூரி முதல்வர் முனைவர் டி.நிர்மலா, துணை முதல்வர் முனைவர் எஸ்.கிரிஜாகுமாரி, மகப்பேறு செவிலிய துறைத் தலைவர் ஜமீலா கிங்ஸ்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



