குழந்தைத் தொழிலா ளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண் ணிற்கு புகார் அளிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
குழந்தைத் தொழிலாளர் களை மீட்கும் பணியில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மற்றும் சைல்டு லைன் ஆகியோர் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட்டு, குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்.
குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது காவல்நிலையத்தில், குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, சட்ட நடவடிக் கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ,மாவட்ட தொழில் மையம் மற்றும் எம்எஸ்எம்இ திட்டம் மூலம் பயிற்சி அளித்து, சுய தொழில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0422 2305445 என்ற தொலைபேசி எண்ணிலோ காலை 9.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை புகார் தெரிவிக்கலாம்.
www.pencil.gov.ln என்ற இணையதளத்திலும் புகார் செய்யலாம்.
தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.
கூட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில் அரசன், ரவிச் சந்திரன், தேசிய குழந்தை தொழிலாளர் மாவட்ட திட்ட அலுவலர் விஜய குமார் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



