கால்நடைகளுக்கு, “கால் நடை மருத்துவ பேரவை” எனப்படும் வெட்னரி சங்கத்தில் பதிவு செய்த கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங் கீகாரம் உண்டு என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது.
மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணிய £ளர்கள் உள்ளனர்.
அவர்களில் சிலர் கால் நடை மருத்துவர் எனக் கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
இது முற்றிலும் தவறானது.
செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாதம் பயிற்சி பெறுகின்றனர்.
அவர்களுக்கு கால்ந¬ டகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது.
இதனால் அவர்கள் கருவூட்டல் மட்டுமே செய்ய தகுதி உள்ளவர்கள்.
எனவே, கால் நடை களுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத் துவர்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும்.
போலி மருத்துவர்கள் குறித்த தகவலை, அந்தந்த மாவட்ட கால் நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநருக்கு அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரி விக்கலாம்.
போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், முதன்முறை 1000 ரூபாய், இரண்டாவது முறை 1000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உண்டு.
இவ்வாறு தனது அறிக்கையில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



