தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பாக கொரோனா வைரஸ் பரவல் கோவிட்-19 மூன் றாவது அலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் (ஆகஸ்ட்1 முதல் 7 வரை) நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
தர்மபுரி மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் திருமதி.ச.திவ்யதர்சினி ஐ.ஏ.ஏஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு துறைகள் சார்பாக ஆங்காங்கே விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்ட தொ ழிலாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மற்றும், தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் திருமதி.டாக்டர்.ஏ.பானுசுஜாதா எம்.பி.பி.எஸ்., தலைமையில் இன்று தர்மபுரியில் உள்ள ஸ்ரீராமா போர்டிங் வளாக கூட்டரங்கில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களுக்கான கொரோனா வைரஸ் காய்ச்சல் (கோவிட்&19) 3ம் அலை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ந¬ டபெற்றது.
உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் அவர்கள் வரவேற்புடன் தர்மபுரி மாவட்ட உணவக பேக்கரிகள் சங்க செயலாளர் திரு.வேணு கோபால் மற்றும் அ¬ னத்து வணிகர் சங்க பொருளாளர் ரவிச் சந் திரன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் முன்னி¬ லயில் நடைபெற்றது.
மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் தன் உரையில், கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சல் குறித்து தெளிவாக அதன் உருவாக்கம், நோயின் அறிகுறிகள்,நோய் பரவும் விதம்,நோய்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து தெளிவாக விளக் தேவையற்ற வதந்திகள் தவிர்க்கவும் இது சம்பந்தமாக மாநில அரசு மற்றும் மாவட்ட நிர் வாகம் அளிக்கும் விளக்கங்களையும் சுகாதார துறையின் வழி காட் டல்களையும் பேணவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் வணிகர்கள் அனைவரும்தாங்கள் மற் றும் தங்கள் நிறுவனங் களுக்குவரும் வாடிக் கைய £ளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வருதலை உறுதிப்படுத்த வேண்டும்.
தனிமனித இடைவெளி குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும்.
கைகளை சுத்தமாக சோப்பால் அல்லது அதற் குரிய கரைசல்( திரவம்) மற்றும் ஹே ண்ட்(கை) சானிடைசர் மூலம் முறையாக கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.
வணிக நிறுவனங்களில் கண்டிப்பாக கிருமி நாசினி மற்றும் கை கழுவ வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
சுற்றுபுறம் தூய் மையாக வைத்திருத்தல் வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மார்க் கெட்கள், சந்தைகள், பொது நிகழ்வுகள், திருமண மற்றும் விசே ஷங்களில் பங்கேற்க வேண்டி இருப்பின் இரண்டு முக கவசங்களை பயன்படுத்த வேண்டும்.
கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தடுப் பூசியே தலை சிறந்த ஆயுதம் ஆகவே வணி கர்கள் அ¬ னவரும் கண் டிப்பாக கொரோனா தடுப் பூசி இரண்டு தவ ணைகள் போட்டுக் கொண்டிருத்தல் வேண்டும்
தங்கள் பணியாளர்கள் மற்றும்குடும்பத்தினர் அனைவரும்தடுப்பூசி செ லுத்திக் கொண்டதை உறுதிப்படுத்திகொள்ள வேண்டும்.
மேற்சொன்ன வழி காட்டல்களை கடைபி டித்தால் மூன்றாவது அலையை மட்டுமல்ல எத்தனையாவது அலை வந்தாலும் எதிர் கொள் ளலாம் என தெரிவித்தார்.
நிகழ்வில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் அடங்கிய விழிப் புணர்வு பிரசுரங்கள் அளிக்கப்பட்டது.
வணிக வளாகங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியபிரசுரம் வைக் கவும்கேட்டுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில்உணவு பாதுகாப்புஅலுவலர்கள் கே.நந்தகோபால், கந்தசாமி,குமணன், ராஜசேகரன் மற்றும் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் திரு.கிரிதரன், மாவட்ட பொருளாளர் திரு.ரவிச்சந்திரன், விநி யோகிப்பாளர் சங்க நிர்வாகிகள் மாவட்ட அனைத்து வணிகர் மற் றும் வர்த்தக சங்கம் உணவக, பேக்கரி நிர் வா கிகள் சங்கத்தினர் திர ளாக பங்கேற்றனர்.



