அத்தியாவசிய பொருட்களில் குட்கா பொருட்களை கடத்துபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட் டரங்கில் நேற்று (ஆக.5) புகையிலை, பான்மசாலா, குட்கா ஒழிப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடை பெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா மெல்லும் புகையிலை போன்ற நிகோடின் கொண்ட பொருள்கள் விற்பனை செய்தல் சேமித்து வைத்தல், விநியோகம் செய்தல், தயாரித்தல் அல்லது வாகனங்களில் எடுத்துச் செல்லவும் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகளில் அனைத்து வாகனங்களும் காவல் துறையினரால் பரி சோதிக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய பொருட்களில் குட்கா பொருட்களை கடத் துபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் விநியோகம் செய்வோர் மற்றும் சேமித்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொது மக்களுக்கு கேடும் தீங்கும் விளைவிக்கக்கூடிய தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வோர் தொடர்பாக 9444042322 (Whatspp)என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் பள்ளி வளாகங்கள் கல் லூரி வளாகங்களுக்கு அருகாமையில் உள்ள கடை களில் திடீர் சோதனைகள் நடத்தவும், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பறக்கும் படை அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் மரு.தமிழ் செல்வன் மாநகர நகர் நல அலுவலர் மரு.ராஜன் மாவட்ட ஆலோசகர் மரு.சரண்யா மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



