fbpx
Homeபிற செய்திகள்மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்கம் கோவையில் பயனாளிகளின் இல்லம் சென்று மருந்து வழங்கினார் அமைச்சர்...

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்கம் கோவையில் பயனாளிகளின் இல்லம் சென்று மருந்து வழங்கினார் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து நேற்று (ஆக.5) மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை காணொலி காட்சி வாயில £க கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நஞ்சுண்டாபுரத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மருத்துவ களப் பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள், பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கி மக்களைத் தேடி மருத்துவ சேவை வாகனத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா, பொது சுகாதாரத்துறை இயக்குநர் மரு.வடிவேலன் துணை இயக்குநர் (மருத்துவம்) மரு. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 45 வயதும், அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க் கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளி பற்றிய குறிப்பை பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார் வலர்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர்.

பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வடிவமை க்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவை க்காக ஈடுபடுத்தப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க விருக்கும் செவிலியர் மற்றும் இயன்முறைச் சிகிச்சையாளர்களின் பயன்பாட்டிற்காக 2 புதிய வாகனங்களின் சேவைகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கொடிய சைத்து துவக்கி வைத்தார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளின் இல்லங் களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை அளிப்பதை பார்வையிட்டதுடன், மருந்துகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img