பீகார் மாநிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கட்ட மைக்கும் பணிக்கான ஒப்பந் தத்தைப் பெற்றுள்ளது டோஷிபா வாட்டர் சொல்யூஷன்ஸ் நிறுவனம்.
டோஷிபா வாட்டர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (TWS), டோஷிபா இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் சிஸ்டம்ஸ் சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் (TISS) நிறுவனத்தின் சார்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது:
பீகார் அர்பன் இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்-உடன் (BUIDCO)கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை கட்டமைக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆலையில் பம்ப் ஸ்டேஷன் / நீரேற்ற நிலையம் அமைப்பது, ஆலையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை கவனிப்பது ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கும்.
கங்கை நதிக்கரையில் அமைந் துள்ள ஹாஜிப்பூர் என்ற நகரத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கட்டமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
கங்கை ஆற்றின் நெடுகே உள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் ஆலைகளுக்கு, அந்த ஆற்றில் தினசரி வெளியிடப்படும் கழிவுநீரில் ஒரு பகுதியை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் உள்ளது.
கங்கை ஆற்றுப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவது என்பது அதிமுக்கியமான பிரச்சனையாக இருப்பதால், 2015-ம் ஆண்டு, இந்திய அரசு இந்த நதியை தூய்மைப்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டத்தினை அறிவித்தது.
அரசின் அந்த செயல்திட்டத்திற்கு பங்களிக்கும் வகையில், TWS நிறுவனம் பீகார் மாநிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையையும், உத்திரப்பிரதேசத்தில் இரண்டை யும், ஜார்கண்டில் ஒன்றையும் கட்டமைத்துள்ளது.
தற்போது பீகார் மாநிலத்தில் TWS நிறுவனம் நான்கு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிர்மா ணித்து வருகிறது.
ஜப்பான் நாட்டில், பல ஆண்டுகளாக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களின் மூலம் TWS நிறுவனம் பெற்ற நிபுணத்துவம் மற்றும் இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஈ.பிசி மற்றும் இயக்கம், பராமரிப்பு பணிகளில் பெற்ற அனுபவம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு TISS இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.



