fbpx
Homeபிற செய்திகள்கோவை யு.பி.எஸ். சோலார் - ஸ்டெப்லைசர் சங்க புதிய தலைவராக ஏ.கே.காஜாமொய்தீன் பதவி ஏற்றார்

கோவை யு.பி.எஸ். சோலார் – ஸ்டெப்லைசர் சங்க புதிய தலைவராக ஏ.கே.காஜாமொய்தீன் பதவி ஏற்றார்

கோவை யு.பி.எஸ். சோலார் மற்றும் ஸ்டெப்லைசர் சங்க 8-வது பொதுக்குழு கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள ஜென்னி கிளப் கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்.

விழாவில் கோவை யு.பி.எஸ். சோலார் மற்றும் ஸ்டெப்லைசர் சங்க புதிய தலைவராக ஏ.கே.காஜாமொய்தீன் பதவி ஏற்றார்.

அதை தொடர்ந்து துணைத் தலைவர் ஸ்டாலின், செயலாளர் முத்துக்குமார், துணை செயலாளர் யுவராஜ், பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பதவி ஏற்றனர்.

மேலும் விழாவில் 10 செயற்குழு உறுப்பினர்களும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில் முகமது நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கோவை யு.பி.எஸ். சோலார் மற்றும் ஸ்டெப் லைசர் சங்க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார், செயலாளர் மற்றும் பொருளாளர் கண்ணன், சங்க பி.ஆர்.ஓ பாண்டியன் ஆகியோர் கூறியதாவது:-
சங்கத்தின் அறக்கட்டளை சார்பில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள், கொரோனா வால் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டது. மேற்கண்ட வாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img