fbpx
Homeபிற செய்திகள்முதல் காலாண்டில் யூகோ வங்கியின் நிகர லாபம் ரூ.101.81 கோடியாக உயர்வு

முதல் காலாண்டில் யூகோ வங்கியின் நிகர லாபம் ரூ.101.81 கோடியாக உயர்வு

ஜூன் 2021 உடன் முடிவடைந்த காலாண்டில் யூகோ வங்கியின் நிகர லாபம் 101.81 கோடி ரூபாயாக அதிகரித்து 374.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2020 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 21.46 கோடி ரூபாயாக இருந்தது.

ஜூன் 2021 காலாண்டில் வங்கியின் இயக்க லாபம் ரூ.1286.28 கோடியாக அதிகரித்து 31.65% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2020 ஜூன் மாதத்துடன் முடிவ¬ டந்த காலாண்டில் ரூ.977.08 கோடி ரூபாயாக இருந்தது.

ஜூன் 2021 உடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் 15.27% வளர்ச்சி பெற்று ரூ.1460.24 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2020 ஜூன் காலாண்டில் ரூ.1266.78 கோடியாக இருந்தது.

இது கடந்த 23 காலாண்டு களில் பெற்ற அதிகபட்ச நிகர வட்டி வருமானமாகும்.
ஜூன் 2021 உடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் பிற வருமானம் ரூ.969.51 கோடியாக அதிகரித்து 25.27% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது 2020 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.773.93 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வர்த்தகம் 30.06.2021 தேதியின்படி ரூ.3,32,946.17 கோடியாக அதிகரித்து 7.28% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 30.06.2020 நிலவரப்படி இது ரூ. 3,103,55.63 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வைப்பு நிதி 30.06.2021 நிலவரப்படி ரூ.2,12,096.82 கோடியாக உயர்ந்துள்ளது. இது 30.06.2020 தேதியின்படி ரூ.1,95,119.60 கோடியிலிருந்து 8.70% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வங்கியின் சேமிப்பு வைப்பு நிதி 30.06.2021 நிலவரப்படி ரூ.71,377.97 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30.06.2020 தேதியின்படி ரூ.66,086.68 கோடியிலிருந்து 8.01% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வங்கியின் மொத்த கடன் 30.06.2021 தேதியின்படி ரூ.1,20,849.35 கோடியாக அதிகரித்துள்ளது, இது 30.06.2020 தேதியின்படி ரூ.1,15,236.03 கோடியிலிருந்து 4.87% வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

வங்கியின் மொத்த வாரா கடன் 30.06.2020 நிலவரப்படி ரூ.16,576.43 கோடியிலிருந்து (14.38%) 30.06.2021 நிலவரப்படி ரூ.11,321.76 கோடியாக (9.37%) குறைந்துள்ளது. மேலும் 31.03.2021 தேதியின்படி இது ரூ.11,351.97 கோடியாக இருந்தது (9.59%).

வங்கியின் நிகர வாரா கடன் 30.06.2020 நிலவரப்படி ரூ.5138.18 கோடியிலிருந்து (4.95%) 30.06.2021 நிலவரப்படி ரூ.4387.25 கோடியாக (3.85%) குறைந்துள்ளது. மேலும் 31.03.2021 தேதியின்படி இது ரூ.4389.50 கோடியாக இருந்தது (3.94%).

படிக்க வேண்டும்

spot_img