fbpx
Homeபிற செய்திகள்புதிய சாவ்லான் ‘பிச்சியாவோ’ஹேண்ட் வாஷ் - ஐடிசி நிறுவனம் அறிமுகம்

புதிய சாவ்லான் ‘பிச்சியாவோ’ஹேண்ட் வாஷ் – ஐடிசி நிறுவனம் அறிமுகம்

கைகளை சுத்தமாக வைத்திருக்க தற்போது சக்திவாய்ந்த, குறைந்த விலையில் சாவ்லான்‘ பிச்சியாவோ’என்னும் பெயரில் புதிய ஹேண்ட்வாஷை ஐடிசி சாவ்லான் அறிமுகப்படுத்தி உள்ளது.

சாவ்லான் பிச்சியாவோ ஹேண்ட் வாஷ் கைகளில் உள்ள லட்சக்கணக்கான கிருமிகளை கொல்லும் திறன் கொண்டதாகும். அறிமுக விலையாக 70 மில்லி லிட்டர் 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.

சவ்லான் பிச்சியாவோ ஹேண்ட்வாஷ் பாட்டி லின் வடிவமைப்பு அதன் தனித்துவமான கேபிலரி செயல்பாடு காரணமாக சிறந்த அழுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது.

இதில் உள்ள திரவத்தை வெளியேற்ற இந்த பாட்டிலை சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை. மென்மையாக அழுத்தம் கொடுத்தாலே போதும், கடைசி சொட்டு திரவம் வரை எளிதாக வெளியேறும். இந்த பாட்டில் மறு பயன்பாட் டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களின் சூப்பர் ஹீரோவாக திகழும் சோட்டா பீம், சாவ்லான் பிச்சியாவோவின் பிராண்ட் தூதராக உள்ளார்.

‘லட்சக்கணக்கான கிருமி களையும் சாவ்லான் பிச்சி யாவோவின் துணையோடு ஒழிப்போம்’ என்னும் தாரக மந்திரத்தோடு சோட்டா பீமின் குரலானது ஒவ்வொரு நாளும் கிருமிகளுக்கு எதிரான போராட்டத்தில் தனித்துவமான சாகச அனுபவத்தை வழங்குகிறது.

ஐடிசி நிறுவனத்தின் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகள் வணிகப் பிரிவின் தலைமை செயல் அதிகாரி சமீர் சத்பதி கூறுகையில், சாவ்லான் பிச்சியாவோ குறைவான அழுத்தம் கொண்ட புதிய வடிவமைப்பு திற னைப் பெற்றுள்ளது.

இது திறன் மிக்கதோடு மட்டு மல்லாமல், மிகவும் குறைந்த விலையில் உள்ளது. இதில் நமது வளங்கள் அனைத்தும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் வடிவமைப்பு ஐடிசியின் புதுமையை பிரதிபலிக்கிறது. சாவ்லான் பிச்சியாவோவின் அறிமுகமானது கை களை சுத்தமாக வைத்திருப்பதற்கான சாவ்லானின் உறுதிப் பாட்டிற்கு மேலும் ஊக் கம் அளிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள மக்கள் அன்றாடம் தங்களின் சிறந்த செயல்பாட்டிற்காக ஹேண் ட்வாஷ் மூலம் கைகளை கழுவுவதற்கு சிறந்த ஹேண்ட்வாஷாகவும் இது அமைந்துள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img