fbpx
Homeபிற செய்திகள்டூரோப்ளெக்ஸ் தூதராக ஆலியா பட்

டூரோப்ளெக்ஸ் தூதராக ஆலியா பட்

நிம்மதியான, சுகமான நித்திரைக்கு, சிறந்த தீர்வு காண உதவும் டூரோஃப்ளெக்ஸ் நிறுவனம், தங்களது முதல் தூதராக நடிகை ஆலியா பட்டை அறிவித்துள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த மெத்தைகளை தயாரித்து வழங்கி வருகிறது டூரோஃப்ளெக்ஸ்.

இந்நிறுவனம் தங்களது அடுத்த பயணத்தை பெரிய பிரச்சாரத்துடன் தொடங்க உள்ளது. இதற்காக பல்துறைத் திறன், விருது வெல்லக் கூடிய நடிப்பாற்றல், சிறப்பான அர்ப்பணிப்பு போன்றவற்றிற்காக அறியப்படும் நடிகை ஆலியா பட்டை டூரோஃப்ளெக்ஸின் தூதராக நியமித்துள்ளனர்.

இந்த நியமனம் குறித்து டூரோஃப்ளெக்ஸின் சி.எம்.ஓ. ஸ்மிதா முரர்கா கூறியதாவது:
டூரோஃப்ளெக்ஸ் எப்போதும் நிம்மதியான நித்திரைக்கு சிறந்த தலைவராக இருந்து வருகிறது.

சிறந்த மெத்தைகளை தயாரித்து அளிப்பதன் மூலம் இந்தியாவில் உள்ளோர் நன்றாக தூங்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இளம் வயது நுகர்வோரின் குரலுக்கு ஒத்துழைக்க நாங்கள் விரும்பினோம். இதற்காக திரைத்துறையில் இளைஞர் பட்டா ளத்தை பெற்றுள்ள ஆலியா பட்டை தேர்ந்தெடுத்தோம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய பகுதியாக தூக்கம் இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். அவர் மூலமாக, இந்தியா முழுவதும் செல்ல தீர்மானித்திருக்கிறோம் என்றார்.

இன்றைய மன அழுத்தம் நிறைந்த சூழலில், தூக்கம் சமரசம் செய்யப்படுகிறது. மேலும் டூரோஃப்ளெக்ஸ் ஒரு பிராண்டாக, சிறந்த தூக்கத்தை தரக்கூடிய மெத்தை போன்ற அத்தியாவசிய தயாரிப்புகளில் தனது தேர்வுகளை மேம்படுத்தி ஊக்குவிக்க விரும்புகிறது.

டூரோஃப்ளெக்ஸ் நிறுவன த்தின் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து ஆலியா பட் கூறும்போது, ஒரு நடிகையாக இருப்பதால் அதிகாலை நேர அழைப்புகள் மற்றும் கடினமான கால அட்டவணைகள் எனது வாழ்க்கையின் பாதையாக உள்ளன.

தூக்கம் எனது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் எனது வெற்றிக்கு முக்கியமானது என்பதை அறிந்திருக்கிறேன்.

நான் ஒருபோதும் என் தூக்கத்தில் சமரசம் செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன். தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு டூரோஃப்ளெக்ஸ் போன்ற சக்திவாய்ந்த பிராண்டோடு இணைந்தி ருப்பதில் நான் மகிழ்ச்சி யடை கிறேன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img