fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சேலம் நிர்வாகிகள் பதவியேற்பு

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சேலம் நிர்வாகிகள் பதவியேற்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, சேலம் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்புவிழா, சேலம் சிவராஜ் ஹாலிடேஇன் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில், கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றிய மத்திய, மாநில அரசுகளை தமிழ்நாடு வணிகர் சங்கம் மனமுவந்து பாராட்டுகிறது.

கொரோனா பெரும் தொற்றால் தங்கள் வாழ்வா தாரத்தை இழந்து வாடும் பாதையோர வியாபாரிகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்கி உதவும்படி தமிழக அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட தலைவர் இராசி.சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்சென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார்.

பொதுச்செயலாளர் எர்த் கே.மனோகரன், பொருளாளர் நளினி, துணைத் தலைவர்கள் சிவராஜ் கல்பனா, சரவணன், கங்கா புவனா, வேணுகோபால், செயலாளர்கள் நாவரசன், ஆனந்த், முருகானந்த், லைன் விஜயகுமார் , ஜான்போஸ்கோ, சட்ட ஆலோசகர் அசோக்குமார், ஊடக தொடர்பாளர் ஜெய்சந்த் லோடா மற்றும் இணைச் செயலாளர்கள், ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img