Homeபிற செய்திகள்கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா

கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா

கோவை மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் கோவை மக்கள் பொதுநலசங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன் கலந்துகொண்டு 25 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மக்கள் பொதுநலசங்கம் தலைவர் ஆனந்தன், துணை தலைவர் பாலாஜி, செயலாளர் சாமுவேல், துணை செயலாளர் பிரகாஷ் பொருளாளர் ஆனந்த், பொதுச்செயலாளர் பிரானேஷ்,
கவுரவ ஆலோசகர் பிரவீன், செந்தில் மதன்குமார், நவீன், அப்பாஸ், துணை பொருளாளர் ரஞ்சித், போட்டோகிராபர் சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img