சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இ.பாபு தலை¬ மயிலான இதய மருத்துவர்கள் குழு, எண்பது வயது நிரம்பிய நோயாளிக்கு உயிர் காக்கும் தீவிர அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப் படும்போது நோயாளி, தொடர் இதயக் கீழறை குருதி ஊட்டக் குறை, நுரையீரலில் நீர்மம், சிறுநீரகச் செயலிழப்பு (ventricular arrhythmia, severe pumping dysfunction and other comorbidities such as fluid in lungs, renal dysfunction)உள்ளிட்ட பல்வேறு கூட்டு நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.
நோயாளியின் இதய குருதிக் குழாய் வரைவி பரிசோதனையில் அவருக்கு இதயக் குருதிக் குழாய்க்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் இதய இரட்டை இரத்த தமனி நோய் இருப்பது உறுதியானது.
இதயத்துக்கு இரத்த ஓட்டம் சீராகச் செல்ல, பிடிசிஏ (PTCA) எனப்படும் இரத்த நாளங்களின் அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு 4 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டன.
இந்த அறுவை சிகிச்சை குறித்து சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இ பாபு கூறுகையில், ‘இதய தமனி நோய் (Coronary Artery Disease) இந்தியாவில் பரவலாகக் காணப்படும் நோயாகும்.
மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறை, அதிகரிக் கும் நீரிழிவு, அதீத உடல் எடை, ஆரோக்கி யமற்ற உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கிராமப் பகுதிகளிலும் இதய தமனி நோய் பரவியுள்ளது.
நோயாளி இப்போது குணமடைந்து தனது அன்றாடச் செயல்களுடன் உடற்பயிற்சியும் மேற் கொள்கிறார்’ என்றார்.
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை ஃபெசிலிடி இயக்குனர் ஆர் சந்திரசேகர் குழுவைப் பாராட்டிப் பேசுகையில் ‘இந்த மகத்தான மருத்துவ மைல்கல் சாதனையைப் படைக்க ஒருங்கிணைந்து செயல்பட்ட டாக்டர் இ பாபு மற்றும் பல்துறை மருத்துவர்கள், மயக்கமருந்து வல்லுனர்கள், உணவியல் நிபுணர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி’ என்றார்.



