fbpx
Homeபிற செய்திகள்75வது சுதந்திர தின விழா:250 கிலோ கொண்ட 76 சதுர அடி பரப்பளவு கேக் தயாரித்து...

75வது சுதந்திர தின விழா:250 கிலோ கொண்ட 76 சதுர அடி பரப்பளவு கேக் தயாரித்து அசத்திய கல்லூரி மாணவர்கள்

கோவையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 250கிலோ எடை கொண்ட 76சதுர அடி பரப்பளவு கேக் அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பெற்றுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றியும், கல்வி நிறுவனங்களில் பல் வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள் ளனர். இந்நிலையில் இந்த 75வது சுதந்திர தினவிழா வை கொண்டாடும் வித மாகவும் 76வது சுதந்திர தினவிழாவை வரவேற்கும் விதமாகவும் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை மாணவர்கள் சிறுதானியங் கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 250கிலோ எடை கொண்ட 76 சதுர அடி பரப்பளவில் கேக் தயாரித்து அசத்தியுள்ளனர்.

இவர்களது இந்த கேக் அனைவரையும் வெகு வாக கவர்ந்தது. கல்லூரி மாணவர்களின் இந்த சாதனையை பாராட்டி அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பாராட்டு களையும் சான்றிதழ்களும் வழங்கியது.

படிக்க வேண்டும்

spot_img