கோவையில் கே.ஜி. டெனிம் 2024 பேஷன் ஆண்டை கொண்டாடுவதையொட்டி புதிய ஜீன்ஸ் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் நிறுவன தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சீசனுக்கு ஏற்ற புத்தம் புதிய ஜீன்ஸ் களை அறிமுகம் செய்து வைத்தார்
அப்போது அவர் கூறியதாவது:- கேஜி டெனிம் நிறுவனம், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் 70 ஷோரும்களை கொண்டுள்ளது. அடுத்த ஆண்டுவாக்கில் இதன் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுவரை கேஜி டெனிம், 6500 பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது.
மேற்கண்டவாறு அவர் கூறினார். அப்போது அவருடன் கேஜி டெனிம் நிறுவனத்தினர் இருந்தனர்.