fbpx
Homeபிற செய்திகள்5398 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,85,82,000 பராமரிப்பு உதவித்தொகை சிறப்பு முகாம்களில் 4957 பேருக்கு கொரோனா தடுப்பூசி வாழ்வில்...

5398 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,85,82,000 பராமரிப்பு உதவித்தொகை சிறப்பு முகாம்களில் 4957 பேருக்கு கொரோனா தடுப்பூசி வாழ்வில் ஒளியேற்றிய முதல்வருக்கு கோடான கோடி நன்றி!

தருமபுரி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில், 5,398 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ.1500 வீதம் இதுநாள் வரை (04/2021 முதல் 09/2021 வரை) ரூ.4,85,82,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது.

37 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 4,957 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தலைமைச் செயலக அளவிலும் மற்றும் துறை தலைமை அளவிலும், இந்தியாவிலேயே தனித் துறையைக் கொண்ட தனிச் சிறப்பு பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கள அலுவலகங்களை இத்துறை கொண்டுள்ளது என்பது அரசின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்க மணியாகும்.

அரசால் மாற்றுத்திறனாளிகளைப் பரிவுடன் கவனித்துக் கொள்வதற்கும் அவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், கொள்கைகள் தங்கு தடை யின்றி சென்றடைவதற்கும் இத்தகைய கட்ட மைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.

இவர்களை மரி யாதையுடன் குறிப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற பதத்தை உருவாக்கியது அவர்கள் மீது முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கொண்டிருந்த பரிவை இயம்புவதாக உள்ளது.
முதல்வர் கட்டுப்பாட்டில்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்களை மேற்பார்வை யிடும் பொருட்டு இத்துறையை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இம்மரபினை தொடர்ந்திடும் விதமாக தற்போதும் முதல்வரின் கீழ் இத்துறை செயல்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்திடும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை அரசு அமைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கு தடையற்ற சூழலுடன் கூடிய சமூகத்தை உருவாக்கிட உறுதி பூண்டுள்ள அரசு அந்த இலக்கினை எய்திட பல்வேறு புதுமையான திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.

ரூ.813.63 கோடி ஒதுக்கீடு
இத்திட்டங்களின் செயல்பாட்டினை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் மாற்றுத்திற னாளிகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்காக 2021-2022-ம் ஆண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையான ரூ.813.63 கோடி இதற்காக ஒதுக்கப்பட்ட தொகைகளிலேயே அதிகமானது என்பதுடன் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டில் அரசு கொண்டுள்ள உறுதியினை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் தேவை களை உணர்ந்துள்ள அரசு அவற்றை நிறை வேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் அதற்கான பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளை தன்னிறைவு பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற அரசின் கோட்பாட்டை அடைவதற்கு இடையூறாக உள்ள அனைத்துத் தடை களையும் நீக்கி, அவர்கள் சமூகத்தில் உரிய அந்தஸ்துடன் வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

வியாழக்கிழமைகளில்
முதல்வரின் ஆணைக்கிணங்க நோய் தடுப்பு நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வியாழக் கிழமைகளில், தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அமைத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இதுநாள் வரை 37 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 4,957 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களில் தங்கியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

12.09.2021 அன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலமாக 972 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது.

7651 பேருக்கு ஸ்மார்ட் கார்டு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றத்திறனாளி களுக்கும், மத்திய அரசின் UDID SMART CARD வழங்கும் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் இதுநாள் வரை 7651 நபர்களுக்கு SMART CARD வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் 4,108 மனவளர்ச்சி குன்றியோர், 827 கடுமையாக பாதிக்கப்பட்டோர், 187 தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், 287 தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 74 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் என மொத்தம் 5,398 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் தலா ரூ.1500 வீதம் இதுநாள் வரை (04/2021 முதல் 09/2021 வரை) ரூ.4,85,82,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது.

855 பேருக்கு உபகரணங்கள் உதவி
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு திட்டமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, நவீன செயற்கைக்கால், ஊன்று கோல், மனவளர்ச்சி குன்றியோருக்கான கற்றல் உபகரணம் பார்வையற்றோருக்கான உபகரணங்கள் மற்றும் கைபேசி, தொழுநோயால் பாதிக்கப்பட் டோருக்கான மருத்துவ உபகரணம் மற்றும் கைபேசி, நவீன காதொலிக் கருவி, பேட்டரிகள் மற்றும் காலிப்பர் போன்ற உதவி உபகரணங்கள் மொத்தம் 855 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.73,27,693 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

‘உங்கள் தொகுதி முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் உதவிகள் வேண்டி பெறப்பட்ட 38 மனுக்கள் மீது நேரடி கள அய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான 13 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், நவீன காதொலிக் கருவி, சக்கர நாற்காலி மற்றும் தேசிய அடையாள அட்டை போன்ற உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.

கவலையை மறந்து மகிழ்ச்சி
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பயனடைந்த பயனாளி சோகத்தூரில் உள்ள கருணை இல்லத்தில் தங்கியுள்ள தினேஷ் தெரிவித்ததாவது:

பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் கருணை இல்லத்தில் தங்கி உள்ள என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

பெற்றோர்களே கைவிட்ட போதும் தமிழக முதல்வர் ஐயா எங்கள் நலனில் அக்கறை கொண்டு என்னை போன்றவர்களையும் பாதுகாத்து பராமரித்திடவும், பெற்றோர்களே இல்லை என்ற கவலையை மறந்து மகிழ்ச்சியுடன் வாழவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக எனக்கு 2007-ம் ஆண்டு முதல் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1500-ம் மற்றவர்களின் உதவியின்றி நானே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு தற்போது சிறப்பு சக்கர நாற்காலியும் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் தேவைகளை முடிந்த அளவிற்கு, நானே செய்துகொள்ளும் அளவிற்கு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

என்னை பெற்றெடுத்தவர்களே புறந்தள்ளிய நிலையில் நான் இருக்கிறேன் கவலை வேண்டாம் என்று எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள முதல்வருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோரிக்கை உடனே ஏற்பு
தருமபுரி, இராஜாபேட்டை, காமராஜ் நகரை சேர்ந்த மூன்று சக்கர சைக்கிள் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனாளி கணேஷ் தெரிவித்ததாவது: சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்கும் திறனை இழந்து வாழ்ந்து வருகிறேன்.

இருந்த போதும் எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நடப் பதற்கு சிரமமாக இருப்பதால் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு விண்ணப்பித்தேன். கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு அரசு சார்பில் மூன்று சக்கர சைக்கிள் இலவசமாக கிடைத்துள்ளது. இ

து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் குறிப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற பட்டத்தை உருவாக்கியதோடு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்களை மேற்பார்வையிடும் பொருட்டு இத்துறையை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

அவ்வழியே செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவிகள் உடனுக்குடன் கிடைத்திடும் வகையில் தனது கட்டுபாட்டின் கீழ் இத்துறையை செயல்படுத்தி தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தடையின்றி கிடைப்பதால், இதன்மூலம் பயன்பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தொகுப்பு
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
த.வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
தருமபுரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img