இந்த பண்டிகை காலத்தில் உற்சாகம் அளிக்கும் விதமாக உலகளாவிய ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ அதன் வி21 வரிசையில், புதிய ‘வி21-நியான் ஸ்பார்க்’ என்னும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
‘ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ச்சி’ என்பதன் அடிப்படையில் விவோ தனது புதிய ‘வி21 நியான் ஸ்பார்க்’ ஸ்மார்ட் போனை கண்கவர் தோற்றத்தில் வடி வமைத்துள்ளது. பிரத்யேகமான ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலை சேஷன் என்னும் முன்புற கேமராவுடன், சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்குவதற்காக மெலிதான ஸ்மார்ட்போன் டிசைன்களில் ஒன்றாக இது வெளி வந்திருக்கிறது.
புத்துணர்ச்சி மிக்க எலுமிச்சை நிறத்தில் வெளிவந்திருக்கிறது. கண்கவர் தோற்றத்தில், பிரகாசமான வண்ணத்தில் வெளி வந்துள்ள இந்த ஸ்மார்ட் போன் தனிநபரின் ஆளுமைக்கு ஏற்றதாக இருக்கும்.
மாறி வரும் புதிய ஸ்டைல் மற்றும் பேஷன் போன்றவற்றிக்கு ஏற்ப இது புதிய தொரு நிறத்தைக் கொண்டுள்ளது. இது தவிர, ஏஜி மேட்கிளாஸ் போன்ற பிளாட் பிரேம் இந்த ஸ்மார்ட் போனின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
இதுகுறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன்மரியா கூறுகையில், நுகர்வோரின் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப நாங் கள் புதிய மாடல்களை தயாரித்து வருகிறோம்.
எங்களின் வி21 மாடல் ஸ்மார்ட் போன் நுகர்வோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக அதன் வடிவமைப்பு மற்றும் புதிய நிறம் ஆகியவை அடுத்த தலைமுறைக்கு ஏற்ப உள்ளது.
எங்களின் தாரக மந்திரமான, ‘ஒவ் வொரு தருணத்திலும் மகிழ்ச்சி’ என்பதன் அடிப்படையில் புதிய வி21 பிரத்யேகமான ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் என்னும் முன்புற கேமராவுடன் சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்குவதோடு மெலிதான ஸ்மார்ட் போன் டிசைன்களில் ஒன்றாக உள்ளது.
மிகவும் எடை குறைவாக வெளி வந்திருக்கும் இந்த ஸ்மார்ட் போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ் வசதி உள்ளது. உங்களின் எதிர்கால பயன்பாட்டிற்கு ஏற்ற 5ஜி தொழில் நுட்பத்தையும் இந்த ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது என்றார் அவர்.



