Homeபிற செய்திகள்399 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.37.31 கோடி மானியம் தொழில் தொடங்க 229 பேருக்கு ரூ. 43.93...

399 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.37.31 கோடி மானியம் தொழில் தொடங்க 229 பேருக்கு ரூ. 43.93 கோடி கடனுதவி – முதல்வருக்கு மனமார்ந்த நன்றி கூறும் இளம் தொழிலதிபர்கள்

கோவை மாவட்ட தொழில் மையம் மூலம் சிறுகுறு மற்றும் நடுத்தர 399 தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம், மின் மானியம், வட்டி மானியம் என மொத்தம் ரூ. 37.31 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்குவதற்கு 229 பேருக்கு ரூ.43.93 கோடி கடனுதவிகளுக்கு ரூ.10.98 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நிலைத்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதற்கும் முக்கிய பங்காற்றுவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை என்று சொன்னால் அது மிகையாகாது.

நீட்ஸ்
இத்தகைய சிறப்பு வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில்முனைவோரை மேலும் ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்து சுயமாக தொழில் தொடங்க ஓர் அற்புதமான திட்டம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS) ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு பெருந்தொழில் வர்த்தகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தொழில் முனைவோருக்கான பயிற்சி அளித்திடவும், இளைஞர்களுக்கு வணிகத் திட்டங்களை வகுத்திடவும் உதவிடுவதோடு, நிதி நிறுவனங்களோடு புதிய தொழில் தொடங்க ஆயத்தம் செய்யவும் உதவி செய்யப்படுகிறது.

ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீடு
இத்திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப் பிக்கலாம். பட்டியலினத்தவர்கள்/ பழங்குடியினர் மற்றும் மாற்று த்திறனாளி விண்ணப்பத £ரர்களுக்கு 10 சதவிகித மானியம் கூடுதலாக வழங்கப்படும். மேலும் 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியம் வழங்கப்படும்.

பிரதம மந்திரியின்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தில்‌ – கிராமப்புறத்தில்‌ தொழில் அமைந்தால் திட்ட மதிப்பீட்டில் 35% மானியமும்‌, நகர்புறத்தில்‌ 25% (சிறப்பு பிரிவினர்), பொதுப்பிரினருக்கு முறையே 25% மற்றும் 15% மானியமும், குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 25% மற்றும் 15% மானியமும் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின் (UYEGP) கீழ் ரூ.5 இலட்சம்‌ வரை திட்ட மதிப்பீட்டில் வியாபார தொழில்களுக்கு விண்ணப்பி க்கலாம்.

திட்ட மதிப்பீட்டில் சிறப்பு பிரிவுனருக்கு 5 சதவீதமும், பொது பிரிவினருக்கு 10 சதவீதமும் சொந்த முதலீடாக இருக்கவேண்டும். திட்ட மதிப்பீட்டில் அரசுமானியமாக 25 சதவீதத்திலிருந்து ரூ.1.25 வரை மானியமாக வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு
கோவை மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக 344 நிறுவனங்களுக்கு ரூ.32.30 கோடியும், மின் மானியமாக 46 நிறுவனங்களுக்கு ரூ.4.88 கோடியும், வட்டி மானியமாக 9 நிறுவனங்களுக்கு ரூ.1.32 இலட்சம் என மொத்தம் 399 நிறுவனங்களுக்கு ரூ.37.31 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 94 நபர்களுக்கு ரூ.2.73 கோடி மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 61 நபர்களுக்கு ரூ.8.40 கோடி திட்ட மதிப்பீட்டில் நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.2.10 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2021-2022-ம் ஆண்டுகளில் 325 நபர்களுக்கு ரூ.1.85 கோடி மானியமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 126 நபர்களுக்கு ரூ.5.80 கோடி திட்ட மதிப்பீட்டில், நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.1.45 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கும் திட்டத்தின் கீழ் 63 நபர்களுக்கு ரூ.6.36கோடி மானியமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 42 நபர்களுக்கு ரூ.29.73 கோடி மதிப்பீட்டில், நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.7.43 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படித்த இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் பெற்று சுயமாக தொழில் தொடங்கி, இளம் தொழில் அதிபர்களாக உருவாகியுள்ள சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சாந்திமதி, நீட்ஸ் திட்டத்தின் கீழ் தானியங்கி உதிரி பாகங்கள் உற்பத்தி செய்ய ரூ.2.01 கோடி கடனுதவியில் ரூ.50

இலட்சம் மானியமும்,
புலியகுளம் பகுதியை சேர்ந்த ரா.பனப்பாண்டி UYEGP திட்டத்தின் கீழ் பேப்பர் (Bar Code labels) தயாரிக்கும் தொழில் தொடங்க ரூ.3.40 இலட்சம் கடனுதவியில் ரூ.85,000 மானியமும், வட்டம லைபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் திசு காகித உற்பத்தி தொழில் தொடங்க ரூ.7.50 இலட்சம் கடனுதவியில் ரூ.1.75 இலட்சம் மானியமும் பெற்றுள்ளனர்.

இவர்கள் முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img