fbpx
Homeபிற செய்திகள்354 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.5 லட்சத்தில் நோட்டுகள், எழுது பொருட்கள், புத்தக பைகள்- நன்செய் அறக்கட்டளை...

354 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.5 லட்சத்தில் நோட்டுகள், எழுது பொருட்கள், புத்தக பைகள்- நன்செய் அறக்கட்டளை வழங்கியது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நன்செய் கல்வி மற்றும் பொதுநல அறக் கட்டளை சார்பாக நோட்டுப் புத்தகங்கள் எழுது பொருட்கள் மற்றும் ஸ்கூல் பேக் போன்றவை வழங்கும் நிகழ்ச்சி நன்செய் அறக்கட்டளை அறங்காவலர் ஆனந்தராஜ் தலைமையில் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணா மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜி.கணேசமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். பின்னர் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன் சிறப்புரையாற்றினார்

நிகழ்ச்சியில் போளூர் வட்டாட்சியர் கி.சண்முகம் மற்றும் சென்னை சியர் தொண்டு நிறுவன விமலா ராணி மற்றும் ஜரஸ்லோவினோத்ராஜ் , யுனைட் டட் வே ஆப் சென்னை ஆகிய தொண்டு நிறுவன நிர்வாகிகள், பெற்றோர்களை இழந்த 354 மாணவ, மாணவிகளுக்கு, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் புத்தக பைகள், 75 அரசு பள்ளி களுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 கணினி மின் சேமிப்பு பெட்டகம் ( யு.பி.எஸ்) வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் சைனிமோல் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பெற்றோர்கள் பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img