Homeபிற செய்திகள்3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 லட்சம் மதிப்பில் 3,43,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல்- முதல்வருக்கு நன்றி தெரிவித்த...

3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 லட்சம் மதிப்பில் 3,43,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல்- முதல்வருக்கு நன்றி தெரிவித்த கோவை விவசாயிகள்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின்கீழ்,கோவை மாவட்டத்தில், 3,430 விவசா யிகளுக்கு ரூ.51.45 இலட்சம் மதிப்பில் 3,43,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும் வேலை வாய்ப்பும் கிடைக்கச் செய்யவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை வேளாண் காடு வளர்ப்பிற்காக மரக்கன்றுகள் சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் வழங்கவும், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தை 16.11.2021 அன்று தலைமைச் செயலகத்தில், தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்கீழ், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலைவேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15/- மதிப்புள்ள தரமான மரக்கன் றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இம்மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம். வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.

மேலும், நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை, நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் போது, வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில், நடவு செய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயி கள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து உரிய அலுவலரின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இலவசமாகப் பெற்றுக் கொள் ளலாம்.

சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 2021-22-ம் ஆண்டு காரமடை வட்டாரத்தில் 26,427 மரக்கன்றுகள் ரூ.3.96 இலட்சம் மதிப்பிலும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 56,133 மரக்கன்றுகள் ரூ.8.42 இலட்சம் மதிப்பிலும், மதுக்கரை வட்டாரத்தில் 15,659 மரக்கன்றுகள் ரூ.2.35 இலட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரத்தில் 34,300 மரக்கன்றுகள் ரூ.5.14 இலட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி (தெற்கு) வட்டாரத்தில் 20,580 மரக்கன்றுகள் ரூ.3.08 இலட்சம் மதிப்பிலும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 17,650 மரக்கன்றுகள் ரூ.2.65 இலட்சம் மதிப்பிலும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் 16,650 மரக்கன் றுகள் ரூ.2.50 இலட்சம் மதிப்பிலும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் 28,740 மரக்கன்றுகள் ரூ.4.31 இலட்சம் மதிப்பிலும், சூலூர் வட்டாரத்தில் 20,580 மரக்கன் றுகள் ரூ.3.08 இலட்சம் மதிப்பி லும், தொண்டாமுத்தூர் வட்டா ரத்தில் 27,440 மரக்கன்றுகள் ரூ.4.11 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 3,430 விவசாயிகளுக்கு ரூ.51.45 இலட்சம் மதிப்பில் 3,43,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு நீண்ட காலம் பயன் தரும் இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் விவசாயிகள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
கோயமுத்தூர்

படிக்க வேண்டும்

spot_img