fbpx
Homeபிற செய்திகள்1971-ம் ஆண்டு கார்கில் வெற்றிக்கு அஞ்சலி செலுத்திடும் வகையில் ஜாவா பைக், காக்கி, மிட்நைட் கிரே...

1971-ம் ஆண்டு கார்கில் வெற்றிக்கு அஞ்சலி செலுத்திடும் வகையில் ஜாவா பைக், காக்கி, மிட்நைட் கிரே வண்ணங்களில் அறிமுகம்

1971 இது வெறும் சாதாரண நாள்காட்டி ஆண்டு இல்லை. 1971 ஒரு புகழ்பெற்ற மைல்கல்லைக் குறிக்கிறது, இது நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கும் மற்றும் வீரத்திற்கும் சான்றாக, ஒரு தேசமாக இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ஒன்றான வெற்றியைப் பதிவுசெய்த ஆண்டாகும்.

இந்த ஆண்டு 1971 யுத்த வெற்றியின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஜாவா மோட்டார்சைக்கிள்கள் தாயக வீரர்களின் துணிச்சலுக்கு (Forever Heroes) அஞ்சலி செலுத்துகிறது.

வெற்றியின் 50-வது ஆண்டு விழாவை நினைவுகூறும் வகையில் நவீன கிளாசிக் ஜாவாவில் இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்கள் காக்கி சீருடையில் மேற்கொண்டுவரும் தன்னலமற்ற சேவையின் உணர்வை குறிக்கிறது ஜாவா காக்கி. ஜாவா மிட்நைட் கிரே, ராஜஸ்தான் எல்லையில் மேற்கு எல்லையில் போராடிய லோங்கேவாலா போரினை உத்வேகமாகக் கொண்டது.

இந்த அஞ்சலிக்கான சூழலை அமைத்த, கிளாசிக் லெஜெண்ட்ஸின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா கூறியதாவது: ஒரு நிறுவனமாக நாம் வெற்றியை எவ்வாறு அளவிடுகிறோம் என்பது எத்தனை மோட்டார் சைக்கிள்களை விற்கிறோம் என்பதைப் பொறுத்து அல்ல, நம்மால் எவ்வளவு திருப்பித் தர முடியும் என்பதைப் பொறுத்ததே என்றார்.

1971 வெற்றியின் அஞ்சலியாக ஜாவாவின் இரண்டு புதிய வண்ணங்களை முன்வைத்து அறிமுகம் செய்த கிளாசிக் லெஜெண்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சிங் ஜோஷி கூறுகையில்,“தேசத்தைப் பாதுகாக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நமது இதயத்தில் சிறப்பு இடம் உண்டு.

ஜாவா காக்கி, ஜாவா மிட்நைட் கிரே ஆகியவற்றை அர்ப்பணிப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது.

ஒரு நிறுவனமாக, எங்கள் மோட்டார் சைக்கிள்களில் இந்திய இராணுவத்தின் அடையாளத்தை எடுத்துச் செல்வதில் பெருமைப்படுகிறோம்.

இது எங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க நமது வீரர்கள் செய்த துணிச்சலையும் தியாகங்களையும் எப்போதும் நினைவூட்டும்”என்றார்.

ஜாவா காக்கி, மிட்நைட் கிரே ஆகியவை ஜாவா டீலர்களிடம் கிடைக்கும், இதன் விலை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,93,357 ஆகும்.

படிக்க வேண்டும்

spot_img