சென்னை, மே 28
உலக அளவில் மருந்துத் துறையில் முன்னணி நிறுவ னமாக திகழ்ந்து வரும் க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் மே மாதத்தை உயர் ரத்த அழுத்த மாதமாக கடை பிடித்தது.
உயர் ரத்த அழுத்தம் குறித்து பொதுமக் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 50 நகரங்களில் உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் மற்றும் 18 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார நிபுணர்களுடன் இணைந்து 110-க்கும் மேற்பட்ட ரத்த அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனை முகாம்களையும் கடந்த ஒரு மாதமாக நடத்தியது.
இந்த திட்டம் குறித்து க்ளென்மார்க் குழுமத்தின் துணைத் தலைவரும் இந்திய பார்முலேஷன் பிரிவு தலை வருமான அலோக் மாலிக் கூறி யதாவது: ‘சைலன்ட் கில்லர்’ என்று அழைக்கப்படும் எந்த அறிகுறிகளும் இல்லாத ரத்த அழுத்தம் குறித்த விழிப்பு ணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு மூன்று இந் தியர்களில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. மருந்து துறையில் முக்கிய நிறுவனமாக திகழும் எங்கள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் இந்த நோயில் இருந்து அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது என்றார்.
உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்துகளில் ஒன்றான டெல்மா, க்ளென்மார்க் நிறுவ னத்தால் தயாரிக்கப்படும் மாத் திரை ஆகும். சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைக்காக #TakeChargeAt18 என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகம் செய்தது. இந்த பிரச்சாரமானது www.bpincontrol.in என்ற இணைய தளம்
உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்தியா முழுவதும் 12 லட்சம் இளைஞர்களை சென்றடைந்துள்ளது. உலக அளவில் இந்நிறுவனம் முதன் முறையாக கடந்த 2020-ம் ஆண்டு ‘ரத்த அழுத்தத்திற்கான சின்னத்தை’ இந்திய உயர் ரத்த அழுத்த சங்கம் மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து அறிமுகம் செய்தது.



